Sunday, November 21, 2010

saalikkram (சாலிகிரம்)

*கல்லில் கலைவண்ணம் கண்டான் மனிதன்.இயற்கையும் இறைவனை கல்லினுள் காட்டியது. அதுதான் சாலிகிரம். எனும் அற்புதமான –அதிசயமான கல். நாற்புறமும் பனி படர்ந்த, கடல் காணாத, பழமையை இன்னும் மறக்காத நேபாளத்தின் ,முக்திநாத எனப்படும் இடத்தில் இரண்டு மலைகளுக்கு இடையில் ஓடும் கண்டகி **எனும் நதியில் உருவாகி, உலகை வியப்பில் ஆழ்த்தும் கல் சாலிகிராம்.
சாலிகிரம் என்பது திருமாலின் சின்னமாகும். இது படிமக் கற்களாகக் கிடைக்கிறது. சாலிகிரம் கற்களில் வட்ட நீள்வட்ட வடிவங்கள் காணப்படும். திருமால் வழிபாட்டில் மிக முக்கியமானது சாலிகிரம். சாலிகிரம் சமயங்களைக் கடந்தும் வழிபடப்படுகின்றது. உலகம் முழுவதிலும் நன்கு அறியப்பட்ட சாலிகிரம் மிகத் தொன்மையான காலமுதல் வழிபடப்பட்டு வருகிறது. கோயில்களிலும், மடங்களிலும் வீடுகளிலும் சாலிகிரமை வைத்து வழபடுகிறார்கள். அது மட்டுமல்லாது கலியாணம் போன்ற பல்வேறு வீட்டு விழாக்களிலும் பூசைகளிலும்சாலிகிரமை வைத்து வழிபடுகிறார்கள்.நீத்தார் கடன்களில் கூட சாலிகிரம் வைத்து வழிபடப் படுகிறது.
108 வைணவத்தலங்களிலும் சாலிக் கிராம் பூஜிக்கப்படுகிறது என்ற தகவலும் உண்டு. ஆலயங்களில் மட்டுமின்றி இல்லங்களிலும் வழிப்பாடுகளும், பூஜைகளும் நடைபெறுகிறது. இல்லங்களில் நடைபெறும் புதுமனை புகுதல் வாஸ்து பூஜை, நவகிரக பூஜை, போன்ற விஷேசங்களிலும் சாலிகிரம் கற்கள் இடம் பெற்று வருகிறது. பத்து அவதாரங்களை உருவாக்கி, வடிவமைத்து பூஜைகளும் நடைபெறுகிறது
பல நூற்றாண்டுகளாக இந்த நிகழ்வுகள் நடந்து வருகிறது. இமயமலை சாரலிலிருந்து சிதறி வரும் கற்கள்இந்த கண்டகி நதியில் உறைந்து தெய்வ நிலைக்கு உயர்கிறது. இந்த சாலி கிராம் கற்களுக்கு தனித்தன்மை இருப்தாக நம்படுகிறது காரணம் இவைகள் சுதர்ஸ்சன சக்கரப் பதிவை கொண்டு இருப்பதால் வஷ்ணுவின் அம்சமாக பெறுகிறது.பொதுவாக இந்த சாலிக் கிராம் கற்கள் கருமை நிறத்தில் காணப்பட்டாலும், பல வண்ணங்களில் காணப்படுகிறது. சிகப்பு,நீல,ம்,பச்சை,மஞ்சள், பொன் நிறங்களிலும் காணக் கிடக்கிறது. இதில் மஞ்சள், பொன் நிறசாலிக் கிராம் கற்கள் அற்புத சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது இம்மாதிரி சாலிகிராம் கற்கள் சிறந்த ஆரோக்கியம், பொருளாதாரத்தை கொண்டு வருகிறது என்பது ஐதீகம்.
சாலிக் கிராம் பல்வேறு வடிவங்களில், பல்வேறு கோணங்களிலும் காணக்கிடைக்கிறது.. விஷ்ணுவின்அவதாரங்களில் நரசிம்ம, கூர்ம வடிவங்களும் கூட கிடைத்து இருப்பததாக கூறப்படுகிறது. வைணவர்கள்
சாலிக் கிரமத்தினை கல்லாக காண்பதில்லை. விஷ்ணுவின் அவதாரமாக, தெய்வமாக காண்பதால் அவர்கள் சிரத்தையான எண்ணத்தோடு பூஜிக்கிறார்கள்.. உடல் தூய்மை, உள்ளத் தூய்மையுடன், ஆத்மார்த்த சுத்தியுடன் பூசை செய்கிறார்கள்.
கலியுகத்திலே திருமால் துளசிச் செடியிலும் சாலிகிரம் கல்லிலும் இருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார் என்பது நம்பிக்கை. துளசிச் செடியைப் பலரும் வீட்டில் வைத்துப் பேணிவணங்கி வழிபடுவது போல சாலிகிரமும் பலரால் வைத்து வழிபடப் படுகிறது. சைவ சமயத்தாரின் இலிங்க வழிபாட்டைப் போன்றதே வைணவரின் சாலிகிரம வழிபாடு என்பது வைணவரின் நம்பிக்கை.
சாலிகிரமக் கற்கள் இயற்கையாகக் கிடைப்பவை. இவை மனிதரால் செதுக்கப் படுவதில்லை. சிற்பமாக வடிக்கப்படுவதில்லை. இயற்கையாகக் கிடைக்கும் வடிவங்கள் பல. கிடைப்பதை அப்படியே பூசையில் வைத்து வழிபடுவது வழக்கம். சாலிகிரம வழிபாட்டை அவரவர் அவர்கள் விருப்பப்படும் முறையில் வழிபடலாம். பூசைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சாலிகிரம வழிபாட்டிற்குப் பூசாரிகள் தேவை இல்லை; வழிகாட்ட யாரும் இருக்கவும் வேண்டியதில்லை. தாமே தமது வழிப்படி வழிபாடு செய்யலாம் என்பது எளியோரையும் சாலிகிரம வழிபாட்டின்பால் ஈர்ப்பதன் காரணமாகும். அதனாலேயே இது வெளிநாட்டாராலும் சமயம் கடந்தும் வழிபடப்படுகின்றது.
சாலிகிரம வழிபாட்டில் முதன்மையானது அபிசேகம் ஆகும். தூய நீரில் சாலிகிரமத்தை அபிசேகம் செய்வதும்,பால் தயிர் நெய் போன்ற பசு தரும் பயன்களால் அபிசேகம் செய்வதும், புண்ணிய நதிகளில் இருந்துகொண்டு வந்த நீரினால் அபிசேகம் செய்வதும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. தொடர்ந்த அபிசேக வழிபாட்டால் இல்லத்தில் எல்லா மங்கலமும் கூடும் என்பதும் பிணிகள் தீரும் என்பதும் ஐதீகமாகும். சாலிகிரமக் கற்கள் இமயமலையில் இருந்து ஓடிவடும் கண்டகி நதியில் மட்டுமே கிடைக்கும். இந்த நதி நேப்பாளப் பகுதியில் இருக்கிறது. சாலிகிரமக் கற்கள் கிடைப்பதாலேயே இதற்கு சாலிகிரமி என்ற பெயரும் உள்ளது.
இந்நதி முக்கியமான புண்ணிய நதிகளில் ஒன்றாகும். இதற்கு நாராயணி, இரண்யாவது என்ற பெயர்களும் உண்டு. மகாபாரதத்தில் இந்நதியின் புனிதம் விளக்கப் படுகிறது. மிகத் தொன்மையான இந்நதி பல ஆயிரம் வருடங்களாக போற்றப்படுகிறது. புராணங்களில் இந்நதி சிறப்பிடம் பெற்ற புண்ணிய நதியாக சொல்லப்பட்டிருக்கிறது. இரிசிகளும் முனிவர்களும் சித்தர்களும் ஞானிகளும் திருநீராடிய நதி சாலிகிரமி என்கிறகண்டகி நதியாகும்.
சாலிகிரமி நதியினை கண்களால் தரிசித்தாலே அவரின் உள்ள நோய்கள் தீர்ந்து விடும். அந்நதியை வழிபட்டு நீரினைத் தொட்டாலே ஒருவருக்கு உடல்ரீதியாக இருக்கக் கூடிய எல்லா நோய்களும் தீர்ந்து விடும். யானைக்கால், தொழுநோய் போன்ற உடல் நோய்களெல்லாம் சாலிகிரமியைத் தொட்டத் தரிசித்தாலே பறந்து விடும் எனும்போது இந்நதியின் பெருமை நன்கு விளக்கமாகிறது. அந்நீரிலே அந்தத் தூய நீரிலே மூழ்கி எழவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அப்படி மூழ்கி எழுந்தால் பிறப்பு இறப்பு இல்லா பெருவாழ்வை ஒருவர் அடைகிறார்.ஆயிரம் பாவங்கள் செய்தவராயினும் சாலிகிரமியில் மூழ்கி எழுங்கால் அவருக்கு மரணமில்லாப்பெருவாழ்வு வாய்க்கிறதென்றால், அந்நதியிலே கிடைக்கும் சாலிகிரமக் கல்லின் மகிமை என்ன என்பதை நாம் எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.
கண்டகி என்கின்ற இந்தப் புண்ணிய நதி நேபாளத்தில் உற்பத்தி ஆகிற இடத்தில் தாமோதர் குண்டா என்கின்ற ஏரி இருக்கிறது. அவ்விடத்திற்கு காளி கண்டகி என்று பெயர். மேலே உற்பத்தி ஆகி மலைகளைக் கடந்து இறங்கி கீழே ஆறாக ஓடுகிற பகுதிக்கு முக்திநாத சேத்திரம் என்று பெயர். சாலிகிரமக் கற்கள் காளி கண்டகி இரு மலைகளுக்கு இடையே ஒடுகின்ற ஒரு பகுதியில் அதிகமாகக் கிடைக்கிறது. அப்பகுதிக்கு தக்சே என்று பெயர். இந்தத்தக்சே என்ற பகுதிதான் தவளகிரி, அன்னபுராண என்ற இருமலைகளுக்கு இடையே இருக்கிறது. கண்டகி நதி தோன்றுகிற இடத்தில் உள்ள தாமோதர குண்ட என்ற ஏரி புனித ஏரியாகும்.
சைவர்கள் வழிபடும் புண்ணிய நீர்நிலைகளில் அதுவும் மிக முக்கியமானதாகும். சைவர்கள் அவ்வேரிக்கு புனித யாத்திரை செல்வதைக் குறிக்கோளாகக் கொள்வர். நேபாளத்தில் கண்டகி ஓடும் வழியில் தக்சே உள்ளிட்ட நான்கு இடங்களில் சாலிகிரமி எடுக்கப் படுகிறது.
சாலிகிரமக் கற்களின் சக்தி மிகப் பெரியதாகும். சமய நம்பிக்கை குறைந்தவர்களுக்கும் புறச்சமயிகளுக்கும் கூட சாலிகிரம வணக்கம் அளவிடற்கரிய நற்பலன்களை அள்ளித்தருகிறது. தினமும் உளமார வழிபடுபவர்களுக்கு தத்துவ நிலையையும், முத்தி நிலையையும் வழங்கி பிறப்பறுத்த பெருவாழ்வை வழங்கும் பெருஞ்செல்வம் சாலிகிரம் ஆகும்.
சாலிகிரமம் பல வகை அல்லது வடிவங்களில் இருக்கிறது. ஆனந்த சாலிகிரம், அனுருத்த சாலிகிரம், புனிதப் பெருஞ்சாலிகிரம், தாமோதர கிருட்டிண சாலிகிரம், மானசரோவதேவி சாலிகிரம், கணேச சாலிகிரம், கருடசாலிகிரம், பொன்னானந்த சாலிகிரம், கோபிநாத் துவாரக சாலிகிரம், கோவிந்த சாலிகிரம், கல்கி சாலிகிரம், கற்பவிருட்ச சாலிகிரம், கற்பலட்சுமி சங்க சாலிகிரம், கமலநாராயண சாலிகிரம், கமலவராக சாலிகிரம், கேசவ சாலிகிரம் என்பன முக்கியமாகச் சொல்லப்படுகின்ற சாலிகிரமமாகும்.
கந்தபுராணத்தில் இந்த சாலிக் கிராம் கற்களை பூஜிக்க தனி மந்திரம் இருப்பதாக கூறப்படுகிறது.. தான்செய்த பாவங்களையும், ,வினைகளையும் நீக்க கருப்பு நிற சாலிக் கிராம் கற்களையும், மஞ்சள் நிற சாலிக்கிராம் கற்கள் பொருளாதர மேம்படவும் பூஜை செய்யப்படுவதாகச சொல்லப்படுகிறது.. நரசிம்ம புராணத்தில், இந்த சாலிக் கிராம் கற்கள் குடை வடிவத்தில் இருப்பின் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, பொருளாதாரஉயர்வை கொண்டு வரும் என்று கூறுகிறது. சாலிக் கிரம் கற்கள் இயற்கையாகவே பல வடிவங்களில் உருவாக்கம் பெற்றுள்ளது., சங்கு, ஆமை, ,மீன் பன்றி போன்ற வடிவங்களுடன், விநாயகர், கும்ப இலக்குமி போன்றும், விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் கொண்டுள்ளது. சிவலிங்க வடிவிலும் காணலாம்.
இந்த சாலி கிராம் கற்கள் எப்படி உருவாக்கிறது பார்த்தால் தெய்வத்தின் அற்புத நிகழ்வுகள் நமக்குவியப்பளிக்கிறது.. இமயமலிருந்து உருண்டு வரும் கற்களில் ‘பஜ்ர கீத்தர்’ என்னும் ஒரு வகை வண்டு
உட்புகுந்து தனது வைரம் போன்ற பற்களால் தசவதாரமான பத்து அவதாரங்களை அரிக்கிறது.. விஷ்ணுஅடையாளங்களை மட்டும் அவைகள் அரிப்பதில்லை. சிவ அடையாளமான சிவ லிங்க அடையாளத்தையும்அரிக்கிறது என்பதுதான் அதிசயம்.
சாலிக் கிராம் பல்வேறு வடிவங்களில், பல்வேறு கோணங்களிலும் காணக்கிடைக்கிறது.. விஷ்ணுவின்
அவதாரங்களில் நரசிம்ம, கூர்ம வடிவங்களும் கூட கிடைத்து இருப்பததாக கூறப்படுகிறது. வைணவர்கள்சாலிக் கிராமத்தினை கல்லாக காண்பதில்லை. விஷ்ணுவின் அவதாரமாக, தெய்வமாக காண்பதால் அவர்கள்
சிரத்தையான எண்ணத்தோடு பூஜிக்கிறார்கள்.. உடல் தூய்மை, உள்ளத் தூய்மையுடன், ஆத்மார்த்த சுத்தியுடன்பூசை செய்கிறார்கள். சாலிக் கிராம் கற்களை வழிபடும் பக்தர்களுக்கு மரண பயம் நெருங்வதில்லை என்று நம்பபடுகிறது. சாலிகிரம வழிபாட்டைச் செய்து அன்பர்கள் பயனடைய வேண்டும்!--

சித்தர்களைப் பத்தி ஒரு ஆய்வு



சித்தர்கள் – தியானம்,மருத்துவம்,ஆன்மீகம்,தத்துவம்,விஞ்ஞானம்,ரசாயனம்,சிற்பம், மொழியறிவு என பல்வேறுபட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் நம் சித்தர்கள். செம்பு, கல், மண் என எதுவையும் தங்கமாக்கும் சொர்ண ரகசியம், ஒருவரின் உடலிலிருந்து மறு உடலுக்கு உயிர் மாறும் கூடுவிட்டு கூடு பாயும் முறை, விலங்குகளுடன் பேசுதல், வசிகரித்தல், உயிர் கொடுத்தல், நீரில் நடத்தல், காற்றில் மிதத்தல் என பல்வேறு சித்துகள் எனப்படும் திறன்களையும் பெற்றிருந்தார்கள்.
சாதாரண மக்களாலும், சமய விற்பனையாளர்களாலும் சொல்லப்பட்ட புனைவுக்கதைகளை நான் இங்கு சொல்லப்போவதில்லை. சித்தர்களைப் பற்றி ஆய்வு நடத்தும் சித்தரியல் நூல்களையும், விங்கிபீடியா, அக்னி சிறகு போன்ற சிறந்த வலைப்பூக்களையும், சித்தர்களைப் பற்றி அறிந்தவர்களின் வார்த்தைகளை கேட்டும் இங்கு எழுதுகிறேன். சிவனை வணங்குவதால் மட்டும் எனக்கும் சித்தர்களுக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டது. பொதுவாக எல்லோறும் கூறுவது போல சித்தர்கள் வெறும் 18 பேர்கள் இல்லை.கொஞ்ச நாள் முன்பு வரை எனக்கும் இந்த செய்தி தெரியாது. சித்தர்களின் பெயர்களை பல்வேறு புத்தகங்கள் வெவ்வேறு விதமாக அச்சிட்டு இருக்கின்றன. பொதுவாக இவைகள் புனைப்பெயர்களாக இருக்கும் என நான் நம்பினேன். ஆனால் சித்தர்கள் நூற்றுக்கும் மேர்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்த போது வியப்பு ஏற்பட்டது. அந்த வியப்புடனே சித்தர்களைப் பற்றிய ஓர் சின்ன பார்வை.பதினென் சித்தர்கள் அல்லது பதினெட்டு சித்தர்கள் என பிரித்தவர்கள் யார் என தெரியவில்லை. இந்த தொகுப்பு முறை காரணமாக இரண்டு வேறுபட்ட பட்டியல் காணப்படுகின்றது. இது மட்டும் அல்ல இன்னும் பிற தொகுப்புகளும் காணப்படலாம்.ஏன் இந்த மாறுபட்ட பட்டியல்கள் என நீங்கள் கேட்டால் அதற்கு ஒரே விளக்கம் தான் என்னிடம் இருக்கிறது. வள்ளல்களை எப்படி ஏழு ஏழாக பிரித்தனரோ, அதைப்போல ஒரு பாகுபாடுதான் சித்தர்களை பிரித்தமைக்கும் இருக்கும் என நினைக்கிறேன்.ஒரு 18 சித்தர்களின் பெயர் பட்டியல் –
1. திருமூலர்2. இராமதேவர்3. கும்பமுனி4. இடைக்காடர்5. தன்வந்திரி6. வால்மீகி7. கமலமுனி8. போக நாதர்
9. மச்ச முனி10. கொய்கணர்11. பதஞ்சலி 12. நந்தி தேவர்13. போதகுரு14. பாம்பாட்டி15. சட்டைமுனி
16. சுந்தரானந்த தேவர்17. குதம்பைச் சித்தர்18. கோரக்கர்அடுத்த 18 சித்தர்களின் பெயர் பட்டியல் –
1. கௌதமர்2. அகத்தியர்3. சங்கரர்4. வைரவர்5. மார்க்கண்டர்,6. வன்மிகர்,7. உரோமர்8. புசண்டர்9. சட்டைமுனி10. நந்தீசர்
11. திருமூலர்12. பாலாங்கிநாதர்13. மச்சமுனி14. புலத்தியர்15. கருவூரார்16. கொங்கணர்17. போகர்18. புலிப்பாணிவேறுபாடுகள் அற்றவர்கள் – இனம், மதம், மொழி, நாடு என்ற நம்முடைய பிரிவினைகளுக்கெல்லாம் கட்டுப்படாதவர்கள் சித்தர்கள். காற்று, நீர், நிலம், நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆண்டவர்களுக்கு சமூகத்தின் பிரிவுகள் பாதிக்கவே இல்லை.
பல நாடுகளில் பயணம் செய்து, பல மொழிகளில் புத்தகங்கள் எழுதியுளார்கள். உதாரணமாக ராமதேவராகிய யாக்கோபு என்ற சித்தர் இஸ்லாமிய மதத்தின் புனித இடமான மெக்காவில் தங்கி தான் கற்றவற்றை, இங்கு வந்து தமிழிலும் எழுதியுள்ளார். அந்தந்த நாடுகளுக்கு தக்கபடி பெயர்கள் இருப்பதால் சில சித்தர்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களும் இருக்கின்றன.அதுமட்டுமல்லாமல் பல மொழித் திறமையால் பல நாடுகளில் அவர்களின் புத்தகங்கள் இருக்கின்றன. சித்தரியல் என்னும் ஒரு இயலே இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. சித்தர்களின் நூல்களை ஆராந்து பார்த்து பல நாடுகளிலும் நவீன மருத்துவத்தில் அதனை சேர்க்க தொடங்கியுள்ளனர்.இவர்களின் கண்டுபிடிப்பான மனநிலையை ஒழுங்கு செய்யும் யோகா, இன்று மிகப்பெரிய அளவில் மக்களை சென்றடைந்துள்ளது. ஜக்கிவாசுதேவ், பரமஹம்ஸ நித்தியானந்தர் , வேதாந்திர மகரிசி போன்றவர்கள் தங்களது வாழ்க்கையை மக்கள் நல்வாழ்வுக்காக தந்து யோக நிலைகளை கற்று தருகிறார்கள். அத்துடன் நல்ல தமிழில் சித்தர்களைப் போல புத்தகங்களும் எழுதுகிறார்கள். ஒரு மதம் என்று இவர்கள் கட்டுக்குள் அடங்குவதில்லை, மதம்,இனம் கடந்து தங்கள் சேவையை செய்து கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை இவர்களும் சித்தர்களே.108 சித்தர்களின் பெயர்கள் -நான் முன்பு கூறியபடியே நூற்றுக்கும் மேற்பட்ட சித்தர்கள் இந்த உலகில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி விரிவாக பார்க்கும் முன்பு 108 சித்த மாமுனிகளின் பெயர்களை படித்து பாருங்கள். உங்களுக்கு தெரிந்த பழக்கமான பல சித்தர்கள் இருப்பார்கள்.
1. திருமூலர்.2. போகர்.3. கருவூர்சித்தர்.4. புலிப்பாணி.5. கொங்கணர்.6. மச்சமுனி.
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்.8. சட்டைமுனி சித்தர்.9. அகத்தியர்.
10. தேரையர்.11. கோரக்கர்.12. பாம்பாட்டி சித்தர்.13. சிவவாக்கியர்.14. உரோமரிசி.
15. காகபுசுண்டர்.16. இடைக்காட்டுச் சித்தர்.17. குதம்ப்பைச் சித்தர்.18. பதஞ்சலி சித்தர்.
சித்தர்கள் – தியானம்,மருத்துவம்,ஆன்மீகம்,தத்துவம்,விஞ்ஞானம்,ரசாயனம்,சிற்பம், மொழியறிவு என பல்வேறுபட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் நம் சித்தர்கள். செம்பு, கல், மண் என எதுவையும் தங்கமாக்கும் சொர்ண ரகசியம், ஒருவரின் உடலிலிருந்து மறு உடலுக்கு உயிர் மாறும் கூடுவிட்டு கூடு பாயும் முறை, விலங்குகளுடன் பேசுதல், வசிகரித்தல், உயிர் கொடுத்தல், நீரில் நடத்தல், காற்றில் மிதத்தல் என பல்வேறு சித்துகள் எனப்படும் திறன்களையும் பெற்றிருந்தார்கள்.
சாதாரண மக்களாலும், சமய விற்பனையாளர்களாலும் சொல்லப்பட்ட புனைவுக்கதைகளை நான் இங்கு சொல்லப்போவதில்லை. சித்தர்களைப் பற்றி ஆய்வு நடத்தும் சித்தரியல் நூல்களையும், விங்கிபீடியா, அக்னி சிறகு போன்ற சிறந்த வலைப்பூக்களையும், சித்தர்களைப் பற்றி அறிந்தவர்களின் வார்த்தைகளை கேட்டும் இங்கு எழுதுகிறேன். சிவனை வணங்குவதால் மட்டும் எனக்கும் சித்தர்களுக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டது. பொதுவாக எல்லோறும் கூறுவது போல சித்தர்கள் வெறும் 18 பேர்கள் இல்லை.கொஞ்ச நாள் முன்பு வரை எனக்கும் இந்த செய்தி தெரியாது. சித்தர்களின் பெயர்களை பல்வேறு புத்தகங்கள் வெவ்வேறு விதமாக அச்சிட்டு இருக்கின்றன. பொதுவாக இவைகள் புனைப்பெயர்களாக இருக்கும் என நான் நம்பினேன். ஆனால் சித்தர்கள் நூற்றுக்கும் மேர்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்த போது வியப்பு ஏற்பட்டது. அந்த வியப்புடனே சித்தர்களைப் பற்றிய ஓர் சின்ன பார்வை.பதினென் சித்தர்கள் அல்லது பதினெட்டு சித்தர்கள் என பிரித்தவர்கள் யார் என தெரியவில்லை. இந்த தொகுப்பு முறை காரணமாக இரண்டு வேறுபட்ட பட்டியல் காணப்படுகின்றது. இது மட்டும் அல்ல இன்னும் பிற தொகுப்புகளும் காணப்படலாம்.ஏன் இந்த மாறுபட்ட பட்டியல்கள் என நீங்கள் கேட்டால் அதற்கு ஒரே விளக்கம் தான் என்னிடம் இருக்கிறது. வள்ளல்களை எப்படி ஏழு ஏழாக பிரித்தனரோ, அதைப்போல ஒரு பாகுபாடுதான் சித்தர்களை பிரித்தமைக்கும் இருக்கும் என நினைக்கிறேன்.ஒரு 18 சித்தர்களின் பெயர் பட்டியல் –
1. திருமூலர்2. இராமதேவர்3. கும்பமுனி4. இடைக்காடர்5. தன்வந்திரி6. வால்மீகி7. கமலமுனி8. போக நாதர்
9. மச்ச முனி10. கொய்கணர்11. பதஞ்சலி 12. நந்தி தேவர்13. போதகுரு14. பாம்பாட்டி15. சட்டைமுனி
16. சுந்தரானந்த தேவர்17. குதம்பைச் சித்தர்18. கோரக்கர்அடுத்த 18 சித்தர்களின் பெயர் பட்டியல் –
1. கௌதமர்2. அகத்தியர்3. சங்கரர்4. வைரவர்5. மார்க்கண்டர்,6. வன்மிகர்,7. உரோமர்8. புசண்டர்9. சட்டைமுனி10. நந்தீசர்
11. திருமூலர்12. பாலாங்கிநாதர்13. மச்சமுனி14. புலத்தியர்15. கருவூரார்16. கொங்கணர்17. போகர்18. புலிப்பாணிவேறுபாடுகள் அற்றவர்கள் – இனம், மதம், மொழி, நாடு என்ற நம்முடைய பிரிவினைகளுக்கெல்லாம் கட்டுப்படாதவர்கள் சித்தர்கள். காற்று, நீர், நிலம், நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆண்டவர்களுக்கு சமூகத்தின் பிரிவுகள் பாதிக்கவே இல்லை.
பல நாடுகளில் பயணம் செய்து, பல மொழிகளில் புத்தகங்கள் எழுதியுளார்கள். உதாரணமாக ராமதேவராகிய யாக்கோபு என்ற சித்தர் இஸ்லாமிய மதத்தின் புனித இடமான மெக்காவில் தங்கி தான் கற்றவற்றை, இங்கு வந்து தமிழிலும் எழுதியுள்ளார். அந்தந்த நாடுகளுக்கு தக்கபடி பெயர்கள் இருப்பதால் சில சித்தர்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களும் இருக்கின்றன.அதுமட்டுமல்லாமல் பல மொழித் திறமையால் பல நாடுகளில் அவர்களின் புத்தகங்கள் இருக்கின்றன. சித்தரியல் என்னும் ஒரு இயலே இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. சித்தர்களின் நூல்களை ஆராந்து பார்த்து பல நாடுகளிலும் நவீன மருத்துவத்தில் அதனை சேர்க்க தொடங்கியுள்ளனர்.இவர்களின் கண்டுபிடிப்பான மனநிலையை ஒழுங்கு செய்யும் யோகா, இன்று மிகப்பெரிய அளவில் மக்களை சென்றடைந்துள்ளது. ஜக்கிவாசுதேவ், பரமஹம்ஸ நித்தியானந்தர் , வேதாந்திர மகரிசி போன்றவர்கள் தங்களது வாழ்க்கையை மக்கள் நல்வாழ்வுக்காக தந்து யோக நிலைகளை கற்று தருகிறார்கள். அத்துடன் நல்ல தமிழில் சித்தர்களைப் போல புத்தகங்களும் எழுதுகிறார்கள். ஒரு மதம் என்று இவர்கள் கட்டுக்குள் அடங்குவதில்லை, மதம்,இனம் கடந்து தங்கள் சேவையை செய்து கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை இவர்களும் சித்தர்களே.108 சித்தர்களின் பெயர்கள் -நான் முன்பு கூறியபடியே நூற்றுக்கும் மேற்பட்ட சித்தர்கள் இந்த உலகில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி விரிவாக பார்க்கும் முன்பு 108 சித்த மாமுனிகளின் பெயர்களை படித்து பாருங்கள். உங்களுக்கு தெரிந்த பழக்கமான பல சித்தர்கள் இருப்பார்கள்.
1. திருமூலர்.2. போகர்.3. கருவூர்சித்தர்.4. புலிப்பாணி.5. கொங்கணர்.6. மச்சமுனி.
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்.8. சட்டைமுனி சித்தர்.9. அகத்தியர்.
10. தேரையர்.11. கோரக்கர்.12. பாம்பாட்டி சித்தர்.13. சிவவாக்கியர்.14. உரோமரிசி.
15. காகபுசுண்டர்.16. இடைக்காட்டுச் சித்தர்.17. குதம்ப்பைச் சித்தர்.18. பதஞ்சலி சித்தர்.
19. புலத்தியர்.20. திருமூலம் நோக்க சித்தர். 21. அழகண்ண சித்தர். 22. நாரதர்.
23. இராமதேவ சித்தர். 24. மார்க்கண்டேயர்.25. புண்ணாக்கீசர்.26. காசிபர். 27. வரதர்.
28. கன்னிச் சித்தர்.29. தன்வந்தரி.30. நந்தி சித்தர் 31. காடுவெளி சித்தர்.32. விசுவாமித்திரர்
33. கௌதமர் 34. கமல முனி 35. சந்திரானந்தர் 36. சுந்தரர்.37. காளங்கி நாதர் 38. வான்மீகி
39. அகப்பேய் சித்தர் 40. பட்டினத்தார் 41. வள்ளலார் 42. சென்னிமலை சித்தர் 43. சதாசிவப் பிரம்மேந்திரர்
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் 45. ராகவேந்திரர் 46. ரமண மகரிஷி.47. குமரகுருபரர்
48. நடன கோபால நாயகி சுவாமிகள் 49. ஞானானந்த சுவாமிகள் 50. ஷீரடி சாயிபாபா
51. சேக்கிழார் பெருமான் 52. ராமானுஜர் 53. பரமஹம்ச யோகானந்தர் 54. யுக்தேஸ்வரர்
55. ஜட்ஜ் சுவாமிகள் 56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார்.58. சிவப்பிரகாச அடிகள்.59. குரு பாபா ராம்தேவ் 60. ராணி சென்னம்மாள்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி 62. குழந்தையானந்த சுவாமிகள்.63. முத்து வடுகநாதர்.64. இராமதேவர்
65. அருணகிரிநாதர்.66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் 67. மௌன சாமி சித்தர் 68. சிறுதொண்டை நாயனார்.69. ஒடுக்கத்தூர் சுவாமிகள்.70. வல்லநாட்டு மகாசித்தர்.71. சுப்பிரமணிய சித்தர்.72. சிவஞான பாலசித்தர்.
73. கம்பர்.74. நாகலிங்க சுவாமிகள்.75. அழகர் சுவாமிகள்.76. சிவஞான பாலைய சுவாமிகள் 77. சித்தானந்த சுவாமிகள்.
78. சக்திவேல் பரமானந்த குரு79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் 80. அக்கா சுவாமிகள் 81. மகான் படே சுவாமிகள்
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் 83. பகவந்த சுவாமிகள்.84. கதிர்வேல் சுவாமிகள்.85. சாந்த நந்த சுவாமிகள்
86. தயானந்த சுவாமிகள் 87. தஷிணாமூர்த்தி சுவாமிகள்.88. ஞானகுரு குள்ளச்சாமிகள்.89. வேதாந்த சுவாமிகள்
90. லஷ்மண சுவாமிகள்.91. மண்ணுருட்டி சுவாமிகள்.92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள்.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்).94. கோட்டூர் சுவாமிகள்.95. தகப்பன் மகன் சமாதி
96. நாராயண சாமி அய்யா சமாதி 97. போதேந்திர சுவாமிகள் 98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள்.99. வன்மீக நாதர்.100. தம்பிக்கலையான் சித்தர் 101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் 102. குகை நாச்சியார் மகான்.
103. வாலைகுருசாமி.104. பாம்பன் சுவாமிகள்.105. குமாரசாமி சித்தர் சுவாமிகள்.106. பெரியாழ்வார் சுவாமிகள்
107. மாயம்மா 108. பரமாச்சாரியார்.ராணி சென்னம்மாள், மாயம்மா என்ற பெயர்கள் பெண் சித்தர்களை குறிக்கின்றன. அதனால் பெண் சித்தர்களும் உலகில் மகிமை புரிந்திருக்கின்றனர்

சில ஆன்மீக குறிப்புகள்

சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும்.இதனால், அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும்.

· தினமும் ஏதாவது மந்திர ஜபம் செய்துவிட்டு நமது தினசரிக்கடமைகளைத் துவக்கவேண்டும்.அப்படி மந்திர ஜபம் முடிந்த வுடனே ஒரு தம்ளர் இளநீர் அருந்தினால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நம் உடலுக்கு உள்ளேயே பதிவாகிவிடும்.

· கடலை எண்ணெய் குடும்பத்தில் கலகத்தை உண்டாக்கும்.எனவே, குடும்பத்தில் கடலை எண்ணெயைப் பயன்படுத்துவதை பெருமளவு குறைப்பது நல்லது.

· ஏனெனில், இந்தக் கலகம் குடும்பங்கிளிடையே பரவி, நாடு முழுக்க கலகத்தை உருவாக்கும்.

· பாமாயில்(பனை மர எண்ணெய்) சமையலில் கலந்து சாப்பிட்டால் துர்தேவதைகள் உடலுக்குள் புகுந்துவிடும்.தொடர்ந்து பாமாயில் பயன்படுத்தினால்(சாப்பிட்டால்) நாளாவட்டத்தில் நமது கை கால்களை முடக்கிவிடும்.

· தேங்காய் தொடர்ந்து உண்டால்(அதாங்க இளமுறி எனப்படும் இளம் தேங்காய்) தாது விளையும்.ஈரலுக்கு வலிமை கொடுக்கும்.குடலிலும், வாயிலும் உள்ள புண்களை ஆற்றும்.

· நம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு.வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.

· வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மற்றவர்கள் விட்ட பெருமூச்சு நீங்க வேண் டுமானால் சாம்பிராணிப்புகை அல்லது 60 வகை மூலிகை சேர்க்கையால் செய்யப்பட்ட மூலிகைப்புகை போடுவது நல்லது.

· நெற்றிச்சுட்டி அறிவுக்கண்ணை(மூன்றாவது கண் நம் எல்லோருக்கும் புருவமத்தியில் இருக்கிறது)த் திறக்கும்.காதணி நல்ல கண்பார்வையைத் தரும்.ஒட்டியாணம் துர் ஆவிகள் பெண்களின் தொப்புள் வழியாக உடலுக்குள் நுழையாமல் தடுக்கும்.

· காலில் அணியும் மிஞ்சி பெண்ணின் காமத்தைக் குறைக்கும்.மூக்குத்தியும் மோதிரமும் சுவாசக்காற்றிலுள்ள விஷகலையை நீக்கும்.

· கோதுமை உணவு சாப்பிடுபவர்கள் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கோதுமை உணவினால் தீமையே(கண் எரிச்சல், மலச்சிக்கல்) ஏற்படும்.

· சுவாதி மற்றும் விசாகம் நட்சத்திரங்கள் நின்ற நாட்களிலும் கடகம் மற்றும் விருச்சிகம் லக்கினங்களிலும் குரு உபதேசம் பெற நன்று.

· கறுப்புத் துணிப் பக்கம் காகம் வருவதில்லை.வெள்ளைத் துணி மற்றும் நீலவெளிச்சத்திற்கு கொசுக்கள் வருவதில்லை.தூய ஆடைகள் பக்கம் கொசு அண்டுவதில்லை.

நம்மாழ்வாரும், மாணிக்கவாசகரும்



தமிழ்நாட்டில் சைவம், வைணவம் என்னும் இருபெரும் சமயங்களும் இரண்டு கண்கள் போலச் சிறந்து விளங்குவன. இவ்விரண்டும் பழமையும், பெருமையும் வாய்ந்தவை.
ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியம் எனும் இலக்கண நூலிலேயே,"மாயோன் மேய காடுறை உலகம்" என்று முல்லை நிலத்திற்கு உரிய தெய்வம் "திருமால்" என்பது சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அதைத் தழுவிப் பிற்காலத்தில் "அங்கண் முல்லையின் தெய்வம் என்று அருந்தமிழ் உரைக்கும் செங்கண் மால்" என்று சேக்கிழார் பெருமானும் வழி மொழிந்துள்ளார்.
"திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேன்" என்று நம்மாழ்வார் பாடுவதற்கு அடிப்படையாக,"மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பில், தாவா விழுப்புகழ் பூவை நிலை" என்று தொல்காப்பியம் விதித்திருத்தலும், திருமால் நெறியின் தொன்மையினை வலியுறுத்தப் போதிய சான்றாகும்.
"சமயக் கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருள் இது" என்று விளக்கிய திருவள்ளுவரும், தாம் எந்த சமயத்தையும் வெளிப்படையாகக் கூறாத இயல்பினராயினும்,"மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகை முடியத் தாவிய சேவடியால்" அளந்த திருமாலைப் பற்றிக் (குறள் - 610) குறிப்பிட்டுள்ளார்.
இன்றைக்கு 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே, சங்க காலத்தில் திருவேங்கடத் திருப்பதியில், வேங்கடேசப் பெருமாள் நின்ற கோலத்தில் விளங்கிக் காட்சி தரும் சிறப்பு, சிலப்பதிகாரத்தில் எழிலுற இனிது விளக்கப்பட்டுள்ளது. இதனால் 2,000 ஆண்டுகளுக்கும் முன்னரே வைணவ சமயம் தமிழ்நாட்டில் தழைத்தோங்கியிருந்த தன்மையும், தொன்மையும் புலனாகின்றன.
முதலாழ்வார்களுள் ஒருவரான பேயாழ்வார், சிவபெருமானும், திருமாலும் பிரிவறக் கலந்து பிணைந்து, இணைந்து, திருவேங்கடமலையின் கண் ஓருருவாய்க் காட்சி தருவதைத் தம் செய்யுளில் இப்படி அழகுறப் பாடி அருளியுள்ளார்:-
"தாழ் சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து."
இப்பாடல் வழி பண்டைக்காலத்தில், தமிழக மக்களிடையில் பரவி, நிலவியிருந்த சைவ - வைணவ சமரச மனப்பான்மை தெளிவுறத் தெரிகிறது. சமயம் மக்களைப் பிரிக்கக் கூடாது. உலகெங்கிலும் உள்ள நல்லறிஞர்கள் பலரும், இந்நாளில் இதனையே பெரிதும் வற்புறுத்தி வருகின்றனர். அத்தகையதொரு சிறந்த நல்விருப்பத்துடனும், குறிக்கோளுடனுமே நம்மாழ்வாரும் - மாணிக்கவாசகரும் வாழ்ந்தார்கள்.
பாண்டிய நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் "திருக்குருகூர்" என்னும் தலத்தில், காரியார் - உடையார்நங்கையார் எனும் தம்பதிக்கு மைந்தராகத் தோன்றியருளினா
ர் நம்மாழ்வார்.

திருமுறைகள்

திருமுறைகளையும் மெய்கண்ட சாத்திரங்களையும் இந்தி மொழிக்கு மொழிபெயர்க்கும் முயற்சி, கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வருகிற தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.

காசிப் பல்கலைக் கழகத்தில் சிவஞானபோதம் இந்தி மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. அதனைத் தேவாரம் மின்னம்பல தளத்தில் சேர்க்க ஆவன செய்துள்ளேன். தட்டச்சாகி வருகிறது.

திருமந்திரம் முழுவதையும் 1997இல் வார்தாவில் காந்தி ஆச்சிரமத்தார் இந்தி மொழிபெயர்ப்பாக வெளியிட்டனர்.

திருமுறைகள் முழுவதையும் மொழிபெயர்க்குமாறு கொல்கத்தா, சாந்திநிகேதனத்தார் 1995இல் சென்னையில் இருந்து பேரா. சுந்தரத்தை அழைத்து, கொல்கத்தாவில் 3 ஆண்டுகள் தங்கவைத்தனர். அவர்,1,4,5,6,7,8 (திருவாசகம்) திருமுறைகளை இந்திக்கு மொழிபெயர்த்தார். அவரை அழைத்த பேராசிரியர் காலமாகிவிடவே, பிறர் ஆர்வம் காட்டாத நிலையில் அவர் சென்னை திரும்பினார்.

திருவாச இந்தி மொழிபெயர்ப்பை அக்காலத்தில் சாந்திநிகேதன் வெளியிட்டது.

சுந்தரர் தோவாரத்தை வார்தா காந்தி ஆச்சிரமம் வெளியிட்டது.
4,5,6 திருமுறைகளை பாடலிபுரப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.
1 திருமுறை கையெழுத்துப் படியாக உள்ளது.
11ஆம் திருமுறை திருமுருகாற்றுப்படையைத் திரு பாலசுப்பிரமணியம் செய்து வைத்திருக்கிறார்.

அருட்செல்வர் நா. மகாலிஙகம் பெரிதும் முயன்று, வண்ணப் படம் ஒரு பக்கம் கதை ஒரு பக்கம் வந்த பெரியபுராணம் நூலை இந்தியிலும் பலவேறு மொழிகளிலும் பதிப்பித்துள்ளார்.

பேரா. இரபீந்திரநாதர் சேத்து என்பர் மூலம் திருமுறைகளில் தேர்ந்த பாடல்களை இந்திக்கு மொழிபெயர்க்க, பல தொகுதிகாளாக அருட்செல்வர் நா. மகாலிங்கம் பதிப்பித்துள்ளார். அந்தப் பதிப்பை அக்காலத்தில் குடியரசுத் தலைவர் வெளியிட்டார்.

சித்தர் பழமொழிகள்.



சித்தர்கள் தனியாகப் பழமொழிகள் ஏதும் பாடியவரல்லர். பதினெண் சித்தர்கள் பாடல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்பட்டவைகளை .


பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.
தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.
பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.
உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்.
புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்.
உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம்


1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.

உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.

2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.
உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்.


3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.
சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள்.

4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்
மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.

5. புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்.
ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.


6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம்
விரும்பிப் போனால் விலகிப் போகும். விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார். மனம் உணருமா?

விஞ்ஞானத்தின் அடிப்படை, மெய்ஞ்ஞானமே

நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த செயல்களும் பழக்க வழக்கங்களும் மிகவும் ஆராய்ந்து அறிவுபூர்வமாக ஏற்படுத்தப்பட்டவையே என்பதையும் நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட மெய்ஞ்ஞானம் தான் இன்றைய விஞ்ஞானம் என்பதை வலியுறுத்துவதையே என் நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரையை வடித்திருக்கிறேன். அப்படி நிரூபிக்க நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட பல நல் வழக்கங்களில் ஒன்றை மட்டும் உதாரணமாக இங்கே எடுத்துக்கொண்டு அலசுகிறேன். இதே போல் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அனைத்து செயல்களிலும் பழக்கவழக்கங்களிலும் விஞ்ஞானம் கலந்தே இருக்கிறது என்பதை இந்த ஒரு உதாரணத்தினால் விளக்க முற்பட்டிருக்கிறேன்.மெய்ஞ்ஞானம்தான் விஞ்ஞானம், விஞ்ஞானம்தான் மெய்ஞ்ஞானம் என்பதைக் கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று ஒரு சொல் வழக்கு இருக்கிறது, அதைக் கண்ணேறு படுதல் என்று நம் முன்னோர்கள் கூறுவர். அந்த திருஷ்டி கழிய, சுற்றிப் போடுதல் அல்லது திருஷ்டி கழித்தல் என்று ஒரு வழக்கத்தை பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தனர் அதை ஆராய்ந்தால் கொஞ்சம் கல் உப்பு எடுத்து அதோடு மிளகாய் வற்றலையும் கையில் வைத்துக்கொண்டு நம்மை நிற்க வைத்து அந்த உப்பை வைத்து நம்மைச் சுற்றிவிட்டு அந்த உப்பையும் காய்ந்த மிளகாயையும் எரிகின்ற நெருப்பில் இடுவார்கள். அந்த உப்பு நெருப்பில் பட்டவுடன் வெடிக்கும்; காய்ந்த மிளகாய் கருகி மிளகாய் நெடி மூக்கைத் தாக்கும். இந்த நிகழ்வில் உப்பும் காய்ந்த மிளகாயும் பஞ்ச பூதங்களாகிய நெருப்பில் இணைந்து ஒரு விதமான ரசாயனக் கலவை ஏற்பட்டு அந்த வேதிய மாற்றம், நமக்கு இருக்கும் வியாதிகளைப் போக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை மட்டுமல்ல; விஞ்ஞானப் பிரகாரம் உப்பும் காய்ந்த மிளகாயும் நெருப்பும் சேர்ந்த கலவையான மணம், நம் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.கொஞ்சம் சுண்ணாம்பு, மஞ்சள் இரண்டையும் பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரில் கலக்கும்போது மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்ந்து ஒரு சிவப்பு நிறத்தை அந்தத் தண்ணீருக்கு அளிக்கும்; அந்தச் சிவப்புத் தண்ணீர் கலப்பதால் ஏற்படும் வேதிய மாற்ற விளைவுகளால் நம் நோய்கள் தீரும் என்றும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கின்றனர்.அதேபோல இந்த இரண்டு செயல்களிலும் ஏற்படும் வேதிய மாற்றத்தால் விளையும் மணம், பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய காற்றில் கலந்து, நம் நாசியில் புகுந்து நமக்குக் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.அதே போல கிராமங்களில் வீட்டு வாயிலில் மார்கழி மாதங்களில், அல்லது அனைத்து மாதங்களிலுமே சாணம் தெளித்து வைப்பர். பசுமாட்டின் சாணம் ஒரு உயர்தரமான கிருமி நாசினி, இந்தக் கிருமி நாசினி, பசுமாட்டின் சாணத்தைப் பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய பூமியின் மேல் தெளிப்பதால் ஏற்படும் வேதிய மாற்றங்களினால் ஏற்படும் வெளிப்பாடாகிய ஒரு விதமான மணம் கிருமிகளிடமிருந்து ஒரு கவசம் போல் நம்மைக் காக்கிறது.அதே போல பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய ஆகாயத்தில் காற்றின் மூலமாகக் கலந்து ஏற்படும் வேதிய மாற்றங்கள் நம்மை பாதிக்கின்றன, அல்லது காக்கின்றன என்பது எவ்வளவு உண்மை!ஆகாயத்தில் இருக்கும் மேகங்களிலிருந்து பெய்யும் மழை, நமக்கு மிகவும் சுத்தமான குடிநீரையும் அளிக்கிறது; பயிர் செழித்து வளரத் தேவையான இயற்கைச் சத்துகளைப் பூமியிலிருந்து காற்றின் மூலமாகவும், சூரிய வெப்பத்தால் தண்ணீர் நீராவியாக மாறும்போது, அந்த நீர் ஆவியாகி அந்த ஆவியோடு பூமியிலுள்ள இயற்கையான பல சத்துகள் தாமாகவே கலந்து அந்தச் சத்துகளும் நீராவியோடு ஆகாயத்தில் சென்று மேகமாக உருக்கொண்டு, மீண்டும் அங்கே ஏற்படும் குளிர்ச்சியான சூழலால் மழையாக மாறும் வேதியியல் விந்தையால் நீராக, சுத்தமான நீராக மாறி மழையாகப் பொழிகிறது, ஆகவே பஞ்ச பூதங்கள் என்று மெய்ஞ்ஞானிகளாலும் ஐந்து வகை சக்திகள் என்று விஞ்ஞானத்தாலும் ஒப்புக்கொள்ளப்படும் இந்தப் பஞ்ச பூதங்களிலிருந்து உருவாகும் ஜீவராசிகளுக்கு இந்தப் பஞ்ச பூதங்களின் சக்திகள், எப்போதும் உதவுகின்றன என்பதை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்த நம் முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே மக்களுக்கு விஞ்ஞானம் என்று சொன்னால் புரியாது என்றுணர்ந்து விஞ்ஞானத்தையே மெய்ஞ்ஞானம் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கின்றனர் என்பதை எண்ணிப் பார்க்கும் போது, அவர்கள் பாமரர்களா அல்லது விஞ்ஞானம் வளர்ந்த இந்த நிலையிலும் இவை எல்லாவற்றையும் அதாவது நம் மெய்ஞ்ஞானமே விஞ்ஞானம் என்றுணராமல் இருக்கும் நாம் பாமரர்களா என்று எண்ணி வியப்படைகிறேன்.ஆகவே இன்றைய முன்னேற்றமான விஞ்ஞானத்தின் அடிப்படை, அன்றைய மெய்ஞ்ஞானமே என்பது அசைக்க முடியாத உண்மை. மெய்ஞ்ஞானம் எதைக் கடவுள் என்று சொல்லுகிறதோ அந்தக் கடவுளை விஞ்ஞானம் இயற்கை என்று சொல்லுகிறது.இயற்கையோடு இணைந்து வாழ்வோம், அதே நேரத்தில் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த அனைத்து நல் வழக்கங்களையும் பழமை என்று ஒதுக்காமல் அவர்கள் கூறிய மெய்ஞ்ஞானத்தில் அந்தக் காலத்திலேயே எப்படி அவர்கள் அவற்றை முறையாக ஆராய்ந்து, விஞ்ஞானத்தை உட்பொருத்தி வைத்திருந்தனர் என்பதை மீண்டும் ஒரு முறை ஆராய்ந்து அவற்றில் உள்ள நன்மைகளை அடைவோம்.ஆகவே கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த நல் வழக்கங்களையும் இயற்கையையும் நம்பி வாழக் கற்றுக்கொண்டால் நல்லது என்று தோன்றுகிறது.