*கல்லில் கலைவண்ணம் கண்டான் மனிதன்.இயற்கையும் இறைவனை கல்லினுள் காட்டியது. அதுதான் சாலிகிரம். எனும் அற்புதமான –அதிசயமான கல். நாற்புறமும் பனி படர்ந்த, கடல் காணாத, பழமையை இன்னும் மறக்காத நேபாளத்தின் ,முக்திநாத எனப்படும் இடத்தில் இரண்டு மலைகளுக்கு இடையில் ஓடும் கண்டகி **எனும் நதியில் உருவாகி, உலகை வியப்பில் ஆழ்த்தும் கல் சாலிகிராம்.
சாலிகிரம் என்பது திருமாலின் சின்னமாகும். இது படிமக் கற்களாகக் கிடைக்கிறது. சாலிகிரம் கற்களில் வட்ட நீள்வட்ட வடிவங்கள் காணப்படும். திருமால் வழிபாட்டில் மிக முக்கியமானது சாலிகிரம். சாலிகிரம் சமயங்களைக் கடந்தும் வழிபடப்படுகின்றது. உலகம் முழுவதிலும் நன்கு அறியப்பட்ட சாலிகிரம் மிகத் தொன்மையான காலமுதல் வழிபடப்பட்டு வருகிறது. கோயில்களிலும், மடங்களிலும் வீடுகளிலும் சாலிகிரமை வைத்து வழபடுகிறார்கள். அது மட்டுமல்லாது கலியாணம் போன்ற பல்வேறு வீட்டு விழாக்களிலும் பூசைகளிலும்சாலிகிரமை வைத்து வழிபடுகிறார்கள்.நீத்தார் கடன்களில் கூட சாலிகிரம் வைத்து வழிபடப் படுகிறது.
108 வைணவத்தலங்களிலும் சாலிக் கிராம் பூஜிக்கப்படுகிறது என்ற தகவலும் உண்டு. ஆலயங்களில் மட்டுமின்றி இல்லங்களிலும் வழிப்பாடுகளும், பூஜைகளும் நடைபெறுகிறது. இல்லங்களில் நடைபெறும் புதுமனை புகுதல் வாஸ்து பூஜை, நவகிரக பூஜை, போன்ற விஷேசங்களிலும் சாலிகிரம் கற்கள் இடம் பெற்று வருகிறது. பத்து அவதாரங்களை உருவாக்கி, வடிவமைத்து பூஜைகளும் நடைபெறுகிறது
பல நூற்றாண்டுகளாக இந்த நிகழ்வுகள் நடந்து வருகிறது. இமயமலை சாரலிலிருந்து சிதறி வரும் கற்கள்இந்த கண்டகி நதியில் உறைந்து தெய்வ நிலைக்கு உயர்கிறது. இந்த சாலி கிராம் கற்களுக்கு தனித்தன்மை இருப்தாக நம்படுகிறது காரணம் இவைகள் சுதர்ஸ்சன சக்கரப் பதிவை கொண்டு இருப்பதால் வஷ்ணுவின் அம்சமாக பெறுகிறது.பொதுவாக இந்த சாலிக் கிராம் கற்கள் கருமை நிறத்தில் காணப்பட்டாலும், பல வண்ணங்களில் காணப்படுகிறது. சிகப்பு,நீல,ம்,பச்சை,மஞ்சள், பொன் நிறங்களிலும் காணக் கிடக்கிறது. இதில் மஞ்சள், பொன் நிறசாலிக் கிராம் கற்கள் அற்புத சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது இம்மாதிரி சாலிகிராம் கற்கள் சிறந்த ஆரோக்கியம், பொருளாதாரத்தை கொண்டு வருகிறது என்பது ஐதீகம்.
சாலிக் கிராம் பல்வேறு வடிவங்களில், பல்வேறு கோணங்களிலும் காணக்கிடைக்கிறது.. விஷ்ணுவின்அவதாரங்களில் நரசிம்ம, கூர்ம வடிவங்களும் கூட கிடைத்து இருப்பததாக கூறப்படுகிறது. வைணவர்கள்
சாலிக் கிரமத்தினை கல்லாக காண்பதில்லை. விஷ்ணுவின் அவதாரமாக, தெய்வமாக காண்பதால் அவர்கள் சிரத்தையான எண்ணத்தோடு பூஜிக்கிறார்கள்.. உடல் தூய்மை, உள்ளத் தூய்மையுடன், ஆத்மார்த்த சுத்தியுடன் பூசை செய்கிறார்கள்.
கலியுகத்திலே திருமால் துளசிச் செடியிலும் சாலிகிரம் கல்லிலும் இருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார் என்பது நம்பிக்கை. துளசிச் செடியைப் பலரும் வீட்டில் வைத்துப் பேணிவணங்கி வழிபடுவது போல சாலிகிரமும் பலரால் வைத்து வழிபடப் படுகிறது. சைவ சமயத்தாரின் இலிங்க வழிபாட்டைப் போன்றதே வைணவரின் சாலிகிரம வழிபாடு என்பது வைணவரின் நம்பிக்கை.
சாலிகிரமக் கற்கள் இயற்கையாகக் கிடைப்பவை. இவை மனிதரால் செதுக்கப் படுவதில்லை. சிற்பமாக வடிக்கப்படுவதில்லை. இயற்கையாகக் கிடைக்கும் வடிவங்கள் பல. கிடைப்பதை அப்படியே பூசையில் வைத்து வழிபடுவது வழக்கம். சாலிகிரம வழிபாட்டை அவரவர் அவர்கள் விருப்பப்படும் முறையில் வழிபடலாம். பூசைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சாலிகிரம வழிபாட்டிற்குப் பூசாரிகள் தேவை இல்லை; வழிகாட்ட யாரும் இருக்கவும் வேண்டியதில்லை. தாமே தமது வழிப்படி வழிபாடு செய்யலாம் என்பது எளியோரையும் சாலிகிரம வழிபாட்டின்பால் ஈர்ப்பதன் காரணமாகும். அதனாலேயே இது வெளிநாட்டாராலும் சமயம் கடந்தும் வழிபடப்படுகின்றது.
சாலிகிரம வழிபாட்டில் முதன்மையானது அபிசேகம் ஆகும். தூய நீரில் சாலிகிரமத்தை அபிசேகம் செய்வதும்,பால் தயிர் நெய் போன்ற பசு தரும் பயன்களால் அபிசேகம் செய்வதும், புண்ணிய நதிகளில் இருந்துகொண்டு வந்த நீரினால் அபிசேகம் செய்வதும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. தொடர்ந்த அபிசேக வழிபாட்டால் இல்லத்தில் எல்லா மங்கலமும் கூடும் என்பதும் பிணிகள் தீரும் என்பதும் ஐதீகமாகும். சாலிகிரமக் கற்கள் இமயமலையில் இருந்து ஓடிவடும் கண்டகி நதியில் மட்டுமே கிடைக்கும். இந்த நதி நேப்பாளப் பகுதியில் இருக்கிறது. சாலிகிரமக் கற்கள் கிடைப்பதாலேயே இதற்கு சாலிகிரமி என்ற பெயரும் உள்ளது.
இந்நதி முக்கியமான புண்ணிய நதிகளில் ஒன்றாகும். இதற்கு நாராயணி, இரண்யாவது என்ற பெயர்களும் உண்டு. மகாபாரதத்தில் இந்நதியின் புனிதம் விளக்கப் படுகிறது. மிகத் தொன்மையான இந்நதி பல ஆயிரம் வருடங்களாக போற்றப்படுகிறது. புராணங்களில் இந்நதி சிறப்பிடம் பெற்ற புண்ணிய நதியாக சொல்லப்பட்டிருக்கிறது. இரிசிகளும் முனிவர்களும் சித்தர்களும் ஞானிகளும் திருநீராடிய நதி சாலிகிரமி என்கிறகண்டகி நதியாகும்.
சாலிகிரமி நதியினை கண்களால் தரிசித்தாலே அவரின் உள்ள நோய்கள் தீர்ந்து விடும். அந்நதியை வழிபட்டு நீரினைத் தொட்டாலே ஒருவருக்கு உடல்ரீதியாக இருக்கக் கூடிய எல்லா நோய்களும் தீர்ந்து விடும். யானைக்கால், தொழுநோய் போன்ற உடல் நோய்களெல்லாம் சாலிகிரமியைத் தொட்டத் தரிசித்தாலே பறந்து விடும் எனும்போது இந்நதியின் பெருமை நன்கு விளக்கமாகிறது. அந்நீரிலே அந்தத் தூய நீரிலே மூழ்கி எழவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அப்படி மூழ்கி எழுந்தால் பிறப்பு இறப்பு இல்லா பெருவாழ்வை ஒருவர் அடைகிறார்.ஆயிரம் பாவங்கள் செய்தவராயினும் சாலிகிரமியில் மூழ்கி எழுங்கால் அவருக்கு மரணமில்லாப்பெருவாழ்வு வாய்க்கிறதென்றால், அந்நதியிலே கிடைக்கும் சாலிகிரமக் கல்லின் மகிமை என்ன என்பதை நாம் எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.
கண்டகி என்கின்ற இந்தப் புண்ணிய நதி நேபாளத்தில் உற்பத்தி ஆகிற இடத்தில் தாமோதர் குண்டா என்கின்ற ஏரி இருக்கிறது. அவ்விடத்திற்கு காளி கண்டகி என்று பெயர். மேலே உற்பத்தி ஆகி மலைகளைக் கடந்து இறங்கி கீழே ஆறாக ஓடுகிற பகுதிக்கு முக்திநாத சேத்திரம் என்று பெயர். சாலிகிரமக் கற்கள் காளி கண்டகி இரு மலைகளுக்கு இடையே ஒடுகின்ற ஒரு பகுதியில் அதிகமாகக் கிடைக்கிறது. அப்பகுதிக்கு தக்சே என்று பெயர். இந்தத்தக்சே என்ற பகுதிதான் தவளகிரி, அன்னபுராண என்ற இருமலைகளுக்கு இடையே இருக்கிறது. கண்டகி நதி தோன்றுகிற இடத்தில் உள்ள தாமோதர குண்ட என்ற ஏரி புனித ஏரியாகும்.
சைவர்கள் வழிபடும் புண்ணிய நீர்நிலைகளில் அதுவும் மிக முக்கியமானதாகும். சைவர்கள் அவ்வேரிக்கு புனித யாத்திரை செல்வதைக் குறிக்கோளாகக் கொள்வர். நேபாளத்தில் கண்டகி ஓடும் வழியில் தக்சே உள்ளிட்ட நான்கு இடங்களில் சாலிகிரமி எடுக்கப் படுகிறது.
சாலிகிரமக் கற்களின் சக்தி மிகப் பெரியதாகும். சமய நம்பிக்கை குறைந்தவர்களுக்கும் புறச்சமயிகளுக்கும் கூட சாலிகிரம வணக்கம் அளவிடற்கரிய நற்பலன்களை அள்ளித்தருகிறது. தினமும் உளமார வழிபடுபவர்களுக்கு தத்துவ நிலையையும், முத்தி நிலையையும் வழங்கி பிறப்பறுத்த பெருவாழ்வை வழங்கும் பெருஞ்செல்வம் சாலிகிரம் ஆகும்.
சாலிகிரமம் பல வகை அல்லது வடிவங்களில் இருக்கிறது. ஆனந்த சாலிகிரம், அனுருத்த சாலிகிரம், புனிதப் பெருஞ்சாலிகிரம், தாமோதர கிருட்டிண சாலிகிரம், மானசரோவதேவி சாலிகிரம், கணேச சாலிகிரம், கருடசாலிகிரம், பொன்னானந்த சாலிகிரம், கோபிநாத் துவாரக சாலிகிரம், கோவிந்த சாலிகிரம், கல்கி சாலிகிரம், கற்பவிருட்ச சாலிகிரம், கற்பலட்சுமி சங்க சாலிகிரம், கமலநாராயண சாலிகிரம், கமலவராக சாலிகிரம், கேசவ சாலிகிரம் என்பன முக்கியமாகச் சொல்லப்படுகின்ற சாலிகிரமமாகும்.
கந்தபுராணத்தில் இந்த சாலிக் கிராம் கற்களை பூஜிக்க தனி மந்திரம் இருப்பதாக கூறப்படுகிறது.. தான்செய்த பாவங்களையும், ,வினைகளையும் நீக்க கருப்பு நிற சாலிக் கிராம் கற்களையும், மஞ்சள் நிற சாலிக்கிராம் கற்கள் பொருளாதர மேம்படவும் பூஜை செய்யப்படுவதாகச சொல்லப்படுகிறது.. நரசிம்ம புராணத்தில், இந்த சாலிக் கிராம் கற்கள் குடை வடிவத்தில் இருப்பின் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, பொருளாதாரஉயர்வை கொண்டு வரும் என்று கூறுகிறது. சாலிக் கிரம் கற்கள் இயற்கையாகவே பல வடிவங்களில் உருவாக்கம் பெற்றுள்ளது., சங்கு, ஆமை, ,மீன் பன்றி போன்ற வடிவங்களுடன், விநாயகர், கும்ப இலக்குமி போன்றும், விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் கொண்டுள்ளது. சிவலிங்க வடிவிலும் காணலாம்.
இந்த சாலி கிராம் கற்கள் எப்படி உருவாக்கிறது பார்த்தால் தெய்வத்தின் அற்புத நிகழ்வுகள் நமக்குவியப்பளிக்கிறது.. இமயமலிருந்து உருண்டு வரும் கற்களில் ‘பஜ்ர கீத்தர்’ என்னும் ஒரு வகை வண்டு
உட்புகுந்து தனது வைரம் போன்ற பற்களால் தசவதாரமான பத்து அவதாரங்களை அரிக்கிறது.. விஷ்ணுஅடையாளங்களை மட்டும் அவைகள் அரிப்பதில்லை. சிவ அடையாளமான சிவ லிங்க அடையாளத்தையும்அரிக்கிறது என்பதுதான் அதிசயம்.
சாலிக் கிராம் பல்வேறு வடிவங்களில், பல்வேறு கோணங்களிலும் காணக்கிடைக்கிறது.. விஷ்ணுவின்
அவதாரங்களில் நரசிம்ம, கூர்ம வடிவங்களும் கூட கிடைத்து இருப்பததாக கூறப்படுகிறது. வைணவர்கள்சாலிக் கிராமத்தினை கல்லாக காண்பதில்லை. விஷ்ணுவின் அவதாரமாக, தெய்வமாக காண்பதால் அவர்கள்
சிரத்தையான எண்ணத்தோடு பூஜிக்கிறார்கள்.. உடல் தூய்மை, உள்ளத் தூய்மையுடன், ஆத்மார்த்த சுத்தியுடன்பூசை செய்கிறார்கள். சாலிக் கிராம் கற்களை வழிபடும் பக்தர்களுக்கு மரண பயம் நெருங்வதில்லை என்று நம்பபடுகிறது. சாலிகிரம வழிபாட்டைச் செய்து அன்பர்கள் பயனடைய வேண்டும்!--
No comments:
Post a Comment